News August 9, 2024

நெசவாளர்களுக்கு கடனுதவி வழங்கினார் அமைச்சர்

image

காஞ்சிபுரத்தில் நேற்று 10ஆவது தேசிய கைத்தறி தினவிழா நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் ரக சேலைகளை உற்பத்தி செய்துவரும் 60 பேருக்கு நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் தலா ரூ.1.25 லட்சம், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 நெசவாளர்களுக்கு ரூ.36.70 லட்சம், நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 20 பேருக்கு ரூ.1200 மாத ஓய்வூதியத்திற்கான ஆணையை அமைச்சர் த.மோ.அன்பரசன் வழங்கினார்.

Similar News

News August 28, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று(ஆக.28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.

▶️ பட்டம்மாள் நடேசன் மண்டபம், மாங்காடு
▶️ அரசு உயர்நிலைப்பள்ளி, மதுரமங்கலம்
▶️ ஊராட்சி மன்ற அலுவலகம், காவித்தண்டலம்
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருமுடிவாக்கம்
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேல்கதிர்பூர்

பொதுமக்கள் நேரில் சென்று உங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து உரிய தீர்வை பெறலாம். SHARE பண்ணுங்க.

News August 27, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (27.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

காஞ்சிபுரம்: அரசு பேருந்து குறித்து புகார் அளிக்க வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் (அ) நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!