News August 9, 2024
நீட் தேர்வு: நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான விசாரணை இன்று (ஆக.9) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட இடங்களில் ஆக.11ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் தேர்வின் வினாத்தாள் விற்பனைக்கு உள்ளதாக டெலிகிராமில் தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தேர்வை ஒத்திவைக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
Similar News
News August 18, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪துணை <<17440516>>ஜனாதிபதி <<>>தேர்தல்.. திமுகவுக்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்
✪மனசாட்சி உள்ள <<17440212>>மக்களாட்சியை <<>>நோக்கி.. தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
✪ஏற்றத்தில் <<17439680>>பங்குச்சந்தை<<>>.. 1,084 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்
✪<<17439383>>உக்ரைன் <<>>NATO-வில் சேரக்கூடாது.. டிரம்ப்
✪₹400 கோடி <<17439244>>வசூலை<<>> அள்ளிய ‘கூலி’
News August 18, 2025
பிழையை திருத்திக் கொள்ள திமுகவுக்கு வாய்ப்பு: நயினார்

2002-ல் ஜனாதிபதி வேட்பாளராக அப்துல் கலாம் களமிறங்கியபோது, திமுக எதிராக வாக்களித்தது. இந்நிலையில், மாபெரும் சாதனை தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையில் இருந்த திமுக, அன்று ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்தது. அதை திருத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு தற்பொழுது அமைந்துள்ளது. துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழரை (CPR) DMK ஆதரிக்க வேண்டும் என நயினார் வலியுறுத்தியுள்ளார்.
News August 18, 2025
பிறப்பு மட்டுமே இல்லாத ஒரு போர்வீரன்!

‘ரத்தத்தை கொடுங்கள்.. நான் விடுதலை பெற்றுக் கொடுக்கிறேன்’ என முழக்கமிட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உலகின் கண்களில் இருந்து மறைந்த தினம் இன்று. அவரால் ஈர்க்கப்பட்டு பல இளைஞர்கள் இந்திய தேசிய ராணுவத்தில்(INA) இணைந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடினர். ஆகஸ்ட் 18, 1945-ல் தைவானில் விமான விபத்தில் நேதாஜி மரணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இன்றும் அவரின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.