News August 9, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இன்று (ஆகஸ்ட் 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News October 19, 2025
மதியத்திற்கு மேல்… வந்தது புதிய எச்சரிக்கை

30 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, கரூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, திருப்பூர், கோவை, தேனி, மதுரை, திண்டுக்கல்லில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
News October 19, 2025
Women’s WC: இந்திய அணி பவுலிங்

மகளிர் உலக கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பவுலிங் செய்யவுள்ளது. கடந்த 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இந்தியா, அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த இப்போட்டியில் வெல்வது அவசியமாகும். நடப்பு தொடரில் தோல்வியே தழுவாத இங்கிலாந்து, இந்தியாவை வீழ்த்தும் பட்சத்தில் அரையிறுதிக்கு 3-வது அணியாக முன்னேறும். இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பதில் ரேணுகா சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
News October 19, 2025
IRCTC-ல் டிக்கெட் புக் செய்பவர்களின் கவனத்திற்கு!

பண்டிகை காலத்தில் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் டிக்கெட் புக் செய்வதால் சில நேரங்களில் IRCTC-யின் சர்வர் டவுன் ஆகிவிடுகிறது. இதனால் சில சமயங்களில் டிக்கெட் புக் ஆகாமல் பணம் டெபிட் ஆகிவிடுகிறது. இதற்கான ரீஃபண்ட் 3 நாட்களுக்குள் உங்கள் வங்கிக்கு வரவேண்டும். அப்படி வரவில்லை எனில், care@irctc.co.in என்ற மின்னஞ்சலுக்கு புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை SHARE பண்ணுங்க.