News August 8, 2024
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று சட்டம்- ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம், போதைப்பொருள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்புக் குழு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 19, 2026
கும்மிடிப்பூண்டியில் விவசாயி பலி!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே உமிப்பேடு கிராம் விவசாயி துரைவேலு (40) கடந்த ஜன.17ஆம் தேதி கும்மிடிப்பூண்டி சென்று மீண்டும் உமிப்பேடு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த ஆட்டோ, பைக் மோதியதில் துரைவேலு பலத்த காயமடைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(ஜன.18) உயிரிழந்தார்.
News January 19, 2026
திருவள்ளூர் மக்களே இலவச WIFI வேண்டுமா?

திருவள்ளூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News January 19, 2026
திருவள்ளூரில் பரிதாப பலி!

திருவள்ளூர்: புழல், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜெஷ்(40). பூ வியாபாரியான இவர், புழல் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த வேன் மோதியதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு அவர் மீது மோதிய வேன் டிரைவரான செந்தில் குமார்56) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


