News August 8, 2024

நீலகிரி: 2 மாதத்தில் 3 யானைகள் பலி

image

கூடலூர்: தொரப்பள்ளி தேன்வயல் பகுதியில் கடந்த ஜூலை 7ஆம் தேதி யானை ஒன்று சேற்றில் சிக்கி உயிரிழந்தது. பின்னர், 30ஆம் தேதி மச்சிகொல்லி பகுதியில் மரம் சரிந்து மின் கம்பியில் சிக்கி இன்னொரு யானை இறந்தது. தற்போது ஸ்ரீமதுரை வடவயல் பகுதியில் மின் கம்பியால், மற்றொரு யானை பலியானது. இப்படி கடந்த 2 மாதத்தில் 3 யானைகள் பலியான சம்பவம் விலங்கு ஆர்வலர்களை வருத்தமடைய செய்துள்ளது.

Similar News

News August 22, 2025

நீலகிரியில் இந்த வாய்ப்பை விட்டுராதீங்க!

image

ஊட்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், குரூப் 2, 2A, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), பணியாளர் தேர்வு ஆணையம் (SSC), இரயில்வே தேர்வு வாரியம் (RRB), மற்றும் கூட்டுறவுத் துறை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்ள, ஊட்டி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 0423-2444004 மற்றும் 9499055948 அழைக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News August 22, 2025

குன்னூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

குன்னூர் சிம்ஸ் பார்க் அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை, மின்னு நுகர்வோர் குறைதீர் கூட்டம், செயற்பொறியாளர் சேகர் தலைமையில் நடைபெற உள்ளது. குன்னூர் நகரம் , எடப்பள்ளி, எடக்காடு, கோத்தகிரி நகரம், நெடுகுலா, அரவேணு, உபதலை குந்தா, சேலாஸ் வெஸ்ட் புரூக், ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 21, 2025

BREAKING: நீலகிரி இளைஞர் தவெக மாநாட்டில் பலி!

image

மதுரையில் இன்று நடைபெற்ற தவெக மாநாட்டில் கலந்துகொண்ட நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த ரோஷன் என்ற இளைஞர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். அதிக வெயில், கூட்ட நெரிசலால் மயக்கமடைந்த ரோஷனுக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!