News August 8, 2024

சனி, ஞாயிறு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு

image

வார இறுதி நாள்களை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஆக.9,10,11 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும், மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், தி.மலை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்து இயக்கப்படும். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்யவும்.

Similar News

News March 18, 2026

கடலூர்: குறை தீர்க்கும் குழு அமைப்பு அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் சோதனையில், கையகப்படுத்தப்படும் பணம் உள்ளிட்ட பொருட்களை விடுவிப்பதற்கு, மாவட்ட குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரை எண் 223 செயல்படும் என்றும், 8300697292 கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News March 18, 2026

தேர்தல் தேதி மாற்றமா? திடீர் பரபரப்பு

image

புதுச்சேரி பேரவை தேர்தலை TN-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள ஏப்.23 அன்றே நடத்த கோரி ECI-க்கு புதுவை DMK கடிதம் அனுப்பியுள்ளது. இரு தேர்தல்களும் வெவ்வேறு நாள்களில் உள்ளதால், TN-ல் பணியாற்றும் புதுவையை சேர்ந்தோர் சிரமப்படுவர் என்றும் DMK குறிப்பிட்டுள்ளது. புதுவை பேரவையின் பதவிக்காலம் ஜூன் 15 வரை உள்ளபோதும், முன்கூட்டியே தேர்தல் நடத்துவதிலுள்ள அவசரம் குறித்து விளக்க வேண்டும் என்றும் DMK கேட்டுள்ளது.

News March 18, 2026

விஜய்யை எதிர்த்து ரஜினி ரசிகர் போட்டி

image

‘எங்கள தொட்டவங்கள நாங்க விட்டதே இல்ல’ என ரஜினி ரசிகர் மன்ற நெல்லை மாவட்ட து.செ., கூறியுள்ளார். தவெக எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் ரஜினி ரசிகர்கள் களமிறங்குவர் என்றார். தற்போது நெல்லையில் போட்டியிட வேட்புமனு வாங்கியுள்ளதாகவும், விஜய் நிற்கும் தொகுதியிலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். ரஜினியிடம் ஆதவ் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

error: Content is protected !!