News August 8, 2024
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு, வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News March 16, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.16) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 16, 2026
இந்தியா வந்தடைந்தது LPG கப்பல்

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு இடையே LPG எரிவாயுவை ஏற்றி வந்த சிவாலிக் சரக்குக் கப்பல் வெற்றிகரமாக இன்று இந்தியா வந்ததடைந்தது. கத்தாரிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், ஆபத்தான ஹார்முஸ் நீரிணையைக் கடந்து இன்று குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால், நாடு முழுவதும் நிலவி வரும் LPG தட்டுப்பாடு விரைவில் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News March 16, 2026
IPL 2026: கேப்டன் ஆனார் அபிஷேக் சர்மா!

SRH அணியின் புதிய கேப்டனாக அபிஷேக் சர்மா பொறுப்பேற்க உள்ளார். பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா இடைக்கால கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. T20 WC-ஐ தவறவிட்ட கம்மின்ஸ் முழுமையாக குணமடைய இன்னும் 2 முதல் 3 வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.


