News August 8, 2024
இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து 2ஆவது முறையாக இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்றது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய ஹாக்கி வீரர்களின் வெற்றி என்பது திறமை, விடாமுயற்சி மற்றும் குழு ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என பாராட்டியுள்ளார். மேலும், துணிச்சலோடு விளையாடிய வீரர்களை வாழ்த்தியுள்ளார்.
Similar News
News October 16, 2025
BREAKING: பிரபல தமிழ் நடிகர்கள் வீடுகளில் பதற்றம்

நடிகர்கள் கார்த்திக், சத்யராஜ், நாசர், அமீர் ஆகியோரின் வீடுகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். டிஜிபி அலுவலகத்திற்கு வந்த இமெயிலை தொடர்ந்து, அனைவரின் வீடுகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த சில நாள்களாகவே, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
News October 16, 2025
BREAKING: இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா?

கனமழை எதிரொலியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை நிலவரத்திற்கேற்ப ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விட தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 16, 2025
மூலிகை: நிலவேம்பின் மருத்துவ பயன்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, நிலவேம்பு கசாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும் *சிறிதளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் சாப்பிட காய்ச்சல் நீங்கும் *நிலவேம்பை காயவைத்து கசாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும் *நிலவேம்பை உலறவைத்து பொடியாக்கி, தேய்த்து குளித்தால், வண்டுக்கடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். SHARE IT.