News August 8, 2024
தங்கத்தை எப்படி வாங்குவது லாபம்?

ஜூலை 2016இல் வெளியிடப்பட்ட தங்கப்பத்திரங்கள் தற்போது முதிர்ச்சி அடைந்திருக்கின்றன. அதில் கிடைத்த தொகையை வைத்து கணக்கிட்டதில், வாங்கியோருக்கு ஆண்டுக்கு 11.96% லாபம் கிடைத்திருக்கிறது. இதே தங்கத்தை 24 கேரட் சொக்கத் தங்கமாக வாங்கியிருந்தால், இந்த 8 ஆண்டுகளில், ஆண்டுக்கு 10.1% லாபம் கிடைத்திருக்கும். அதையே, 22 கேரட் நகையாக வாங்கியிருந்தால், 8.8% லாபம் மட்டுமே கிடைத்திருக்கும்.
Similar News
News August 22, 2025
பாக்., அணியுடன் மோதுவதை உறுதி செய்த மத்திய அரசு!

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாக்., உடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுவதில்லை. இதனிடையே, ஆசிய கோப்பை தொடரில் ஒரே குரூப்பில் இந்தியா, பாக்., இடம்பெற்றது. இதனால் இரு அணிகளும் மோதுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ICC தொடர்களில் இந்தியா விளையாடும் என விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாக்.,ல் நடைபெறும் போட்டிகளிலும், அவ்வணியுடன் இருதரப்பு தொடர்களிலும் விளையாடாது என்றும் விளக்கியுள்ளது.
News August 22, 2025
திமுகவுக்கு தாவிய தவெக நிர்வாகிகள்.. விஜய் அதிர்ச்சி

கரூரில் தவெக முக்கிய நிர்வாகிகள் சிலர் திமுகவுக்கு தாவியுள்ளனர். செந்தில் பாலாஜி முன்னிலையில், TVK ஒன்றிய செயலாளர் சீனிவாசன், ஒன்றிய துணை செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். அதிமுக, பாஜகவினரை குறிவைத்து திமுகவில் சேர்த்து வந்த Ex அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது தவெகவினரையும் டார்கெட் செய்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
News August 22, 2025
ஒருபுறம் உயர்வு.. மறுபுறம் சரிவு!

GST வரிவிதிப்பு சீர்திருத்தம், ரஷ்யா, உக்ரைன் அதிபர்களுடன் USA அதிபர் பேச்சு வார்த்தை உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82,000 புள்ளிகளை தொட்டுள்ளது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 25,083 புள்ளிகளில் உள்ளது. ஆனாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிந்து ₹87.25 ஆக உள்ளது.