News August 8, 2024
கும்மிடிப்பூண்டி அருகே பட்டா கேட்டு போராடிய 250 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே செதில்பாக்கத்தில் 118 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதிரிவேடு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வருவாய் துறையினர் ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என போராட்டக் குழுவினரிடம் தெரிவித்தனர்.
Similar News
News July 11, 2025
ஆவடி அருகே தீ பற்றி எரிந்த லாரி

நேற்று காலை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து எலக்ட்ரிக்கல் பொருட்களை ஏற்றிக் கொண்டு காட்டுப்பள்ளி துறைமுகம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி, ஆவடி வெள்ளானூர் தனியார் கல்லூரி அருகே திடீரென புகைவிட்டு தீப்பிடித்தது.தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 11, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் ரத்து

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் தற்காலிகமாக ஜூலை 15 முதல் செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு பிரதாப் அறிக்கையின் மூலமாக தெரிவித்தார்.
News July 11, 2025
44.5 கோடி ரூபாய் கையாடல் மேலாளர் தற்கொலை

புழல் பிரிட்டானியா நகர் திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவீன் பொல்லினேனி (37) மூன்று வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார் அவர் 44.5 கோடி ரூபாய் கையாடல் செய்து விட்டதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக நிறுவன சட்ட ஆலோசகர்கள் கொளத்தூர் காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நவீன் நேற்று தூக்கிட்டு உயிரிழந்ததால் புழல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.