News August 8, 2024

Olympics: ஆண்டிம் பங்கல் 3 ஆண்டுகள் விளையாட தடை

image

ஒலிம்பிக்ஸ் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட, இந்திய மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் 3 ஆண்டுகள் விளையாட தடை விதித்து இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. ஆண்டிம் பங்கல் தனது அடையாள அட்டையை, சகோதரியிடம் கொடுத்து அவரை ஒலிம்பிக் கிராமத்திற்குள் அனுப்பியதால் ஒலிம்பிக் தொடரில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். 53 கிலோ எடைப் பிரிவில் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 28, 2025

இருமல் டானிக்கை ஸ்டாக் வைக்கலாமா? Must Read

image

டாக்டர் பரிந்துரைத்த நாள்களில் Syrup-ஐ குடித்துவிட்டு, Expiry Date இருக்கிறது என்பதற்காக ஸ்டாக் வைக்கக்கூடாது. Syrup பாட்டிலை திறக்கும்போது அதனுள் புகும் காற்றால், ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு, அதன் தன்மையை இழந்து நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு. அதேபோல, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு காரணங்களால் இருமல் வரும் என்பதால், ஸ்டாக் வைத்த Syrup-ஐ எடுத்துக் கொள்ளக்கூடாது என்கின்றனர் டாக்டர்கள்.

News October 28, 2025

விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு

image

கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு 1 மாதமாக முடங்கிப்போய் இருக்கிறது தவெக. நேற்றுதான் பலியானோர் குடும்பத்தை அழைத்து விஜய் ஆறுதல் சொல்லி, இழப்பீடு வழங்கினார். இந்நிலையில், மீண்டும் புத்துணர்ச்சியோடு தேர்தல் பணிகளை தொடர்வது குறித்து 2-ம் கட்ட நிர்வாகிகளோடு விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில், கட்சியின் பொதுக்குழுவை விரைவில் நடத்தவேண்டும் என விஜய் சொன்னதாக கூறப்படுகிறது.

News October 28, 2025

‘மொன்தா’ பெயரின் அர்த்தம் தெரியுமா?

image

இன்று தமிழகம், ஆந்திராவை அதிர வைத்துள்ள ‘மொன்தா’ புயலின் பெயர் காரணம் தெரியுமா? இப்பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது. தாய்லாந்து மொழியில் ‘மொன்தா’ என்றால், ‘மணமிக்க மலர்’ அல்லது ‘அழகான பூ’ என பொருள் பெறுகிறது. மேலும், மென்மை, அழகு & இயற்கையின் மணத்தை குறிக்கவும் தாய்லாந்து மொழியில் ‘மொன்தா’ குறிப்பிடப்படுகிறது. எனவே, இயற்கையின் அழகையும், மழையின் நறுமணத்தையும் ‘மொன்தா’ பிரதிபலிக்கிறது.

error: Content is protected !!