News August 8, 2024
தோழிக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த சிறுவன் கைது

டெல்லியின் நஜாப்கர் பகுதியில், 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், தனது பெண் தோழியின் பிறந்தநாளில் அவருக்கு ஐஃபோன் பரிசளிக்க தனது தாயின் நகைகளை திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். விசாரணையில் தாயின் நகைகளை அருகில் உள்ள 2 வெவ்வேறு கடைகளில் விற்று, அந்த பணத்தில் பெண் தோழிக்கு ஐஃபோன் வாங்கிக் கொடுத்தது அம்பலமானது. தொடர்ந்து, நகைகளை மீட்ட போலீசார், திருட்டு நகை வாங்கிய கடைக்காரர்களை கைது செய்தனர்.
Similar News
News January 9, 2026
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.08) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 8, 2026
ராசி பலன்கள் (09.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 8, 2026
ரெடியா? நாளை முதல் காலை 11 – இரவு 8.30 வரை

49-வது சென்னை புத்தக கண்காட்சியை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புத்தக கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை (ஜன. 21 வரை) நடைபெறும் என்றும் இந்த புத்தக கண்காட்சியில் வாசகர்களுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுகதை, நாவல் உள்பட லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறும் இந்த கண்காட்சியில், நீங்க வாங்க விரும்பும் புத்தகம் எது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.


