News August 8, 2024
தஞ்சை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.
News October 19, 2025
தஞ்சை: அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு

திருச்சியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்( 52). இவர் திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று விட்டு அங்கு உள்ள மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நடுப்படுகை தெற்கு வாய்க்கால் கரை தெருவை சேர்ந்த குட்டி என்ற பிரவீன் (28), பாலகிருஷ்ணனை வழிமறித்து அரிவாளைக் காட்டி மிரட்டி அவர் கையில் இருந்த ரூ.500-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் காவல்துறையினர் பிரவீனை கைது செய்தனர்.
News October 19, 2025
தஞ்சை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

தஞ்சை மாவட்டத்தில் 91 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!