News August 8, 2024
திருவள்ளூரில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 8, 2026
திருவள்ளூர்: போஸ்ட் ஆபீஸில் 30,000 காலியிடங்கள்!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!
News January 8, 2026
திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 8, 2026
திருவள்ளூர் வருகிறார் மு.க.ஸ்டாலின்!

திருவள்ளூர்: பாடியநல்லூரில் நேற்று(ஜன.7) இரவு 11:00 மணி அளவில் எதிர்வரும் ஜனவரி 9 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள “உங்கள் கனவுகளை சொல்லுங்கள்” நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதல்வர் பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ள இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் நேரில் பார்வையிட்டனர்.


