News August 8, 2024

புலிப்பாக்கத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு

image

செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள கொளவாய் ரூ.60 கோடி மதிப்பீட்டில் ஏரிகளை ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்தி, நடைபாதைகள் அமைக்கப்பட உள்ள பணியினை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 6, 2025

செங்கல்பட்டு: சிறுமியிடம் அத்துமீறிய வழக்கில் 7 ஆண்டுகள் சிறை!

image

தாம்பரம் பகுதியில் 9 வயது சிறுமி குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். அந்த பகுதியை சார்ந்த சுல்தான் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு குரான் சொல்லி குடுத்து வந்த நிலையில் அந்த சிறுமியும் அவரும் குரான் படித்துள்ளார். 26/9/17 அன்று சுல்தான் சிறுவர்களை கடைக்கு அனுப்பி விட்டு சிறுமியிடம் அத்துமீற முயன்றுள்ளார்.இதையறிந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். கோர்ட்டில் நேற்று 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.

News December 6, 2025

செங்கல்பட்டு: பெட்ரோல் பங்க் மீது லாரி மோதி விபத்து!

image

அச்சரப்பாக்கம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையொட்டி தொழுப்பேடு பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது.இங்கு, தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கி சுண்ணாம்பு மாவு ஏற்றிச்சென்ற ஈச்சர் வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க்கில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 6, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்துப் பணி விவரம்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக இரவு பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் அவசர உதவிக்கு பயன்படுத்திக் கொள்ளவும். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!