News August 8, 2024

ஈரோட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை: உதவித்தொகை

image

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய 2 இடங்களில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) உள்ளன. இதில் நடப்பாண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் ஆகஸ்டு 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 22, 2025

ஈரோடு மாவட்டத்தின் தனி சிறப்புகள் அறிக!

image

* தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது,
* இங்கு கைத்தறி துணி உற்பத்தி பிரபலம்,
* வரலாற்றுச் சிறப்பாக சோழர், பாண்டியர், கங்கர், போசாளர் போன்ற அரச மரபினர் ஆட்சி செய்துள்ளனர்.
* சுற்றுலாத் தலங்களாக பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில், கொடிவேரி அணை, பண்ணாரி அம்மன் கோயில், சென்னிமலை முருகன் கோயில், பவானிசாகர் அணை என பல சிறப்புக்கள் உள்ளது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் பண்ணுங்க.

News August 22, 2025

ஈரோடு பூம்புகாரில் விநாயகா் சிலைகள் கண்காட்சி, விற்பனை

image

ஈரோடு மேட்டூா் சாலை அருகே பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி வரும் ஆகஸ்ட் 30- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனையில் பித்தளை, பேப்பா் கூழ், மண், வெள்ளெருக்குவோ், மாா்பில் பவுடா், மாவுக்கல், கருங்கல் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது.

News August 22, 2025

ஈரோடில் டி.என்.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்பு

image

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் வெளியிட்ட தகவலில், டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. வரும் 24ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று வார ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பதிவு செய்பவர்களுக்கு இடம் தெரிவிக்கப்படும். பயிற்சியுடன் பாடக்குறிப்பு, போட்டித் தேர்வு தொகுப்பும் இலவசமாக வழங்கப்படும்.

error: Content is protected !!