News August 8, 2024

சிவகங்கை அருகே பட்டிமன்ற பேச்சாளருக்கு விருது

image

கண்டரமாணிக்கம் அருகே தெற்குபட்டி மாணிக்க நாச்சி அம்மன் கோவிலில், பட்டிமன்ற பேச்சாளர் தேவகோட்டை ராமநாதனுக்கு உலக தமிழ் பறவை என்னும் பட்டய விருதையும் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் ஆன பொற்கிழியையும் பிள்ளையார்பட்டி சிவஸ்ரீ பிச்சை குருக்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள் கல்வி நிறுவனங்கள், ஊர் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News March 16, 2026

மதுபான கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்

image

சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி மற்றும் மானாமதுரை (தனி) தொகுதிகளுக்கு வரும் 23-4-26 அன்று அந்தந்த தொகுதிக்குட்பட்ட வாக்கு சாவடிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து அரசு மதுபான கடைகளில் MRP க்கு அதிகமாக விற்பனை செய்யப்பட மாட்டாது. அவ்வாறு தகவல் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உறுதியளித்தார்.

News March 16, 2026

சிவகங்கை: சொத்து வாங்கும் போது இத CHECK பண்ணுங்க..

image

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து
CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News March 16, 2026

சிவகங்கை: தேர்தல் விதிமுறை மீறல் குறித்து புகார் தெரிவிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், விதிமுறை மீறல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் புகார் அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் 18004257036 மற்றும் 1950 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து புகார் அளிக்கலாம் என ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!