News August 8, 2024
BREAKING: நீலகிரி எஸ்பி மாற்றம்!

மாநிலம் முழுவதும் 24 காவல்துறை உயர் அதிகாரிகளை இடமாற்றும் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், நீலகிரி மாவட்ட எஸ்பியாக இருந்துவரும் சுந்தரவடிவேல் சென்னை பூக்கடை வீதி காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, புதிய எஸ்பியாக நிஷா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிஷா தற்போது சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்துவருகிறார்.
Similar News
News December 9, 2025
நீலகிரி: ரூ.48,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

நீலகிரி மக்களே, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)-இன் கீழ் செயல்படும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் இளநிலை சுருக்கெழுத்தாளர் பணிகள் காலியாக உள்ளன. இதற்கு +2 படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-27. சம்பளம் ரூ. 48,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள், இந்த லிங்கை <
News December 9, 2025
கூடலூர் அருகே சம்பவம் செய்த யானை!

கூடலுார் ஸ்ரீமதுரை அருகே, முதுமலையை ஒட்டி அமைந்துள்ளது போஸ்பாரா கிராமம். அவ்வப்போது இக்கிராமத்தில் இரவில் முகாமிடும் காட்டு யானை விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதிகாலை இப்பகுதியில் நுழைந்த காட்டு யானை, ஜோசப் என்பவரின் பூட்டிய கடையின் ஒரு பகுதியை சேதப்படுத்தி சென்றது. வனத்துறையினர், சேதமடைந்த கடையை ஆய்வு செய்து, யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
News December 9, 2025
நீலகிரி: கன்றுகுட்டியை இழுத்து சென்ற ஆட்கொல்லி புலி!

முதுமலை மசினகுடி வனக்கோட்டம், மாவனவல்லாவில் சமீபத்தில் ஆடுமேயத்த நபரை புலி தாக்கி கொன்றது. அந்த புலியை பிடிக்க, தானியங்கி கேமராக்களை வைத்தும், வனக்குழுக்கள் அமைத்தும் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மாவனல்லா குடியிருப்பை ஒட்டி தனியார் விடுதி அருகே மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த கன்றுக்குட்டியை புலி தாக்கி இழுத்து சென்றுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


