News August 8, 2024
அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் அமைச்சர்

வாலாஜா தாலுகா மேல்விஷாரம் தி நேஷனல் வெல்பர் அசோசியேஷன் சார்பில் மேல்விஷாரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.1,75000 மதிப்பிலான உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் காந்தி கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனை டாக்டரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் தி நேஷனல் வெல்ஃபேர் அசோசியேசன் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News December 25, 2025
ராணிப்பேட்டை: பன்றி கடித்து ஐந்து வயது சிறுமி படுகாயம்

தாஜ்புரா ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சரவணன், இவரது மகள் சிவானி 5 இவர் தனது வீட்டின் அருகே இன்று (டிசம்பர் 25)ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த போது பன்றி கூட்டம் ஒன்று திடீரென அந்த வழியாக வந்தது. அதிலிருந்து ஒரு பன்றி சிவானியை முகம் உடல் என பல இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
News December 25, 2025
ராணிப்பேட்டை: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆன்டு செப்., மாதம் பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News December 25, 2025
ராணிப்பேட்டை: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

ராணிப்பேட்டையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க


