News August 8, 2024

ALERT: இங்கெல்லாம் கனமழை அடித்து வெளுக்கும்.

image

தமிழகத்தில் செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வரும் 11ஆம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 12ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

Similar News

News October 17, 2025

திமுகவின் கையை விட்டு போகிறது.. ஸ்டாலின் அதிருப்தி

image

மதுரை மாநகராட்சியின் அடுத்த மேயர் யார் என்பதை முடிவு செய்வதில் உள்கட்சி பூசல் காரணமாக CM ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேயர் இந்திராணி ராஜினாமா செய்த நிலையில், தற்போது வரை புதிய மேயர் தேர்வாகவில்லை. இதனால், துணை மேயராக உள்ள நாகராஜன்(CPM) இன்று முதல் பொறுப்பு மேயராகவுள்ளார். ஏற்கெனவே மாநகராட்சி நிர்வாகம், திமுகவினருக்கு நாகராஜன் கடும் நெருக்கடியை கொடுத்து வந்தது கவனிக்கத்தக்கது.

News October 17, 2025

தீபாவளி ஸ்பெஷல்: தேங்காய்- பச்சரிசி அல்வா!

image

தேங்காயை துருவி, அரைத்து பால் எடுக்கவும். அதே போல, பச்சரிசியை ஊறவைத்து அரைத்து கொள்ளவும். சிறிது தேங்காயை துருவி எடுக்கவும். நெய்யில் முந்திரி, துருவிய தேங்காயை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். அடுத்து மிதமான தீயில் வெண்ணெய், தேங்காய்ப்பால், அரைத்த பச்சரிசி மாவு, நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும். இவை அல்வா பதத்திற்கு வரும் போது, வறுத்த தேங்காய் & முந்திரியை சேர்த்தால் அல்வா ரெடி. SHARE.

News October 17, 2025

இந்தியச் சந்தைகள் ஏற்றம்; முதலீட்டாளர்கள் குஷி!

image

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 85 புள்ளிகள் உயர்ந்து 83,552 புள்ளிகளிலும், நிஃப்டி 21 புள்ளிகள் உயர்ந்து 25,606 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Asian Paints, Maruti Suzuki, Tata Motors, Reliance உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.

error: Content is protected !!