News August 8, 2024

அரூர் அரசு கல்லூரியில் இன்று 3ஆம் கட்ட கலந்தாய்வு

image

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர, இணைய வழியில் விண்ணப்பித்து அதற்கான இரண்டு கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்தன. இந்நிலையில், பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்து உடனடித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்காமல் நேரடியாக கல்லூரிகளில் சேர 3ஆம் கட்ட கலந்தாய்வு இன்று (8ஆம் தேதி) நடைபெற உள்ளது. மாணவரகள் இதனை பயன்படுத்தி பயன்பெறவும்.

Similar News

News September 17, 2025

ரூ.356.48 கோடி ஓய்வூதியம்; ஆட்சியர் தகவல்

image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தேசிய முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம்,தமிழர்களுக்கான ஓய்வூதியம் என 59,365 நபர்களுக்கு ரூ.356.48 கோடி ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.என ஆட்சியர் சதிஸ் தெரிவித்துள்ளார்.

News September 17, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.17) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ராஜா சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News September 17, 2025

தருமபுரி: 10th போதும், மத்திய அரசு வேலை!

image

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 1.கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, 2.சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100, 3.வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு) கடைசி தேதி: செப்டம்பர் 28 இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!