News August 8, 2024
இந்திய அணி வீரர்களுக்கு கம்பீர் எச்சரிக்கை?

இலங்கை அணியிடம் ஒருநாள் தாெடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், பலரும் அணி வீரர்களை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தோல்விக்குப் பிறகு வீரர்களிடையே கம்பீர் பேசியதாகவும், அப்போது ரோஹித், கோலி தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளான ரஞ்சி, துலிப், விஜய் ஹசாரே ஆகியவற்றில் நிச்சயம் விளையாட வேண்டும். அப்போதுதான் அணியில் இடம் அளிக்கப்படுமென எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
Similar News
News October 18, 2025
தீபாவளி: பள்ளிகளுக்கு மேலும் ஒருநாள் விடுமுறை

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் மக்கள், திரும்புவதற்கு ஏதுவாக வரும் 21-ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை வருகிறது. இதன் மூலம் இன்று முதல் தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறையாகும். இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விடுமுறையில் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்.
News October 18, 2025
கோடி ரூபாய் கொடுத்தாலும் இத பண்ணமாட்டேன்: விஷால்

நடிப்பு, தயாரிப்பு என இயங்கி வரும் விஷால் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதுதான் ’Yours Frankly Vishal’ என்ற பாட்காஸ்ட். இதில் தனது அனுபவங்களை பகிர்ந்த விஷால், எத்தனை கோடி சம்பளம் கொடுத்தாலும் ’அவன் இவன்’ படத்தில் நடித்தது போல மாறு கண் கொண்ட கதாபாத்திரத்தில் இனி நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். அவன் இவன் படத்துக்கு பிறகு தனது கரியர் முடிந்துவிட்டது என நினைத்ததாகவும் பேசியுள்ளார்.
News October 18, 2025
அதிமுகவுக்கு EPS கொடுத்த அல்வா: சேகர்பாபு

EPS கொடுத்த அல்வாவால் தான் அதிமுக பல கோணங்களில் சென்று கொண்டிருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அல்வா விமர்சனத்துக்கு பதிலளித்த அவர், EPS-ன் அல்வாவால் செங்கோட்டையன் போன்றவர்கள் பிரிந்து நின்று எதிர் கருத்துக்களை சொல்லி கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார். அல்வாவும் உணவு தான் என்று கூறியுள்ள சேகர்பாபு, தேவைப்படும் இடத்தில் CM ஸ்டாலின் அதையும் பரிமாறுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.