News August 8, 2024
BREAKING: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது. தரவரிசை பட்டியலுடன் மாணவர்களின் செல்போன் எண்களை சில விஷமிகள் சுயநலத்துக்காக வெளியிட்டுள்ளதாகவும், அவ்வாறு வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது. அத்துடன், அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News December 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 554 ▶குறள்:
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
▶பொருள்: நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.
News December 19, 2025
உலகின் உயரமான கட்டடங்கள் PHOTOS

உலகின் மிக உயரமான கட்டடங்கள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கலை வடிவமைப்புக்கு எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன. வானுயர்ந்து நிற்கும் இந்த கட்டடங்கள், நகரங்களின் அடையாளமாகவும் உள்ளன. அப்படி உலகப் புகழ்பெற்ற டாப்-10 உயரமான கட்டங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 19, 2025
MGR முகமூடியை விஜய் போடுகிறார்: ஜெயக்குமார்

விஜய்க்கு என்று ஒரு தனித்தன்மை கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். MGR முகமூடி போட்டுக்கொண்டு வந்தால்தான் மக்களை சந்திக்க முடியும் என்ற நிலையில் விஜய்க்கு உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், MGR, ஜெயலலிதா, அண்ணா என எந்த முகமூடி போட்டு வந்தாலும், இரட்டை இலைக்கு வாக்கு செலுத்திய கைகள் வேறு எந்த கட்சிக்கு வோட்டு போடாது என்றும் அவர் கூறியுள்ளார்.


