News August 8, 2024
10 நாட்களில் 6,310 டன் குப்பை கழிவுகள் அகற்றம்

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும், கடந்த 10 நாட்களாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தத் தீவிர தூய்மைப் பணிகளில், சுமார் 6,310 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News August 19, 2025
சென்னையில் டிகிரி இருந்தால் வங்கி வேலை…

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் உள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் நாளை மறுநாளைக்குள் (ஆகஸ்ட் 21) <
News August 19, 2025
சென்னையில் உயிரை பறித்த இன்ஸ்டா ரீல்ஸ்

சென்னை பல்லாவரத்தில் KTM பைக்கை அதிவேகமாக ஓட்டி சென்றபோது, எதிரே வந்த ஸ்கூட்டியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுஹேல் அகமது (15) என்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். KTM பைக்கை இயக்கிய அப்துல் அகமது (17), ஸ்கூட்டியில் வந்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரீல்ஸ் எடுக்க பைக்கை அதிவேகமாக இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
News August 19, 2025
சென்னைக்கு இன்று மழை இருக்கா?

சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 18) மழை பெய்தது. இன்று செவ்வாய்கிழமையும் சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது. சூறாவளிக்காற்று மணிக்கு 40 – 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க