News August 8, 2024

வினேஷ் போகத் ஓய்வு அறிவிப்பில் மாற்றம்?

image

வினேஷ் போகத் இன்று அதிகாலை ஓய்வை அறிவித்த நிலையில், கோபத்தின் வெளிப்பாடுதான் ஓய்வு அறிவிப்பு என அவரது சிறுவயது பயிற்சியாளரும், உறவினருமான மகாவீர் போகத் தெரிவித்துள்ளார். வினேஷை நேரில் சந்தித்து ஓய்வு அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்துவதாகக் கூறிய அவர். வினேஷும், சாக்‌ஷியும் அடுத்த தலைமுறை பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்கிற்கு தயாராகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News March 20, 2026

கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள்

image

*நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல, நாமே ஏற்படுத்திக் கொள்வது. *முதலில் யார் மீதாவது குற்றம் சாட்ட விரும்பினால், உன் மீதே சாட்டு. *கருணை பொங்கும் உள்ளம், அது கடவுள் வாழும் இல்லம். *உண்மையைச் சொல்பவன் உறவை இழக்கிறான். உறவை விரும்புபவன் உண்மையை இழக்கிறான். *மனிதனுடைய திறமை பெரிதல்ல, கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது.

News March 20, 2026

கத்தார் மீதான தாக்குதலுக்கு PM மோடி கண்டனம்

image

கத்தாரின் <<19423057>>எரிசக்தி நிறுவனங்கள்<<>> மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு PM மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கத்தார் PM ஷேக் தமிம் பின் ஹமாத்திடம் அவர் தொலைபேசியில் உரையாற்றியுள்ளார். அப்போது, அங்குள்ள இந்தியர்களுக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி கூறிய PM மோடி, அப்பகுதியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் மீண்டும் நிலவ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News March 20, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 638
▶குறள்:
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
▶பொருள்: சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.

error: Content is protected !!