News August 8, 2024
விளையாட்டில் தோல்வியும் ஒரு பகுதி: மீரா

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பளுதூக்குதலில் நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்த இந்திய வீராங்கனை மீராபாய் சானு, அடுத்த முறை நிச்சயம் நாட்டிற்காக பதக்கம் வெல்வேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். தன்னால் முடிந்தளவு முயற்சி செய்ததாகவும், ஆனால் தோல்வியும், வெற்றியும் விளையாட்டின் ஒரு பகுதி எனவும் பக்குவமாக பேசியுள்ளார். மீரா, 199 கிலோ எடையை தூக்கி 4ஆம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 23, 2025
ஆஹா.. Whatsapp-ல் வந்த அசத்தல் அப்டேட்!

Whatsapp-ல் ‘Mention Everyone’ என்ற புதிய அப்டேட்டை Meta கொண்டு வரவுள்ளது. இதன் மூலம், ஒரு Group Chat-ல் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் ஒரே நேரத்தில் Mention செய்து மெசேஜ் செய்ய முடியும். முன்னர், அனைவரையும் Tag செய்ய வேண்டும் என்றால், ஒவ்வொரு பெயராக தேர்வு செய்ய வேண்டும். தற்போது Beta பயனர்களுக்கு கிடைக்கும் இந்த அம்சம், விரைவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 23, 2025
திமுக எம்எல்ஏ காலமானார்.. நேரில் அஞ்சலி

சேந்தமங்கலம் திமுக <<18078637>>MLA பொன்னுசாமி(74)<<>> மாரடைப்பால் சற்றுமுன் காலமானார். கொல்லிமலை வீட்டில் நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், நாமக்கல்லில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ஏற்கெனவே 2 முறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, நாமக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
News October 23, 2025
சிகரெட்டை விட இது ரொம்ப டேஞ்சர்.. கவனமா இருங்க!

நம்மூரில் ஊதுபத்தி ஏற்றாத வீடுகளே இருக்காது எனலாம். நறுமணத்தால் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும் இந்த ஊதுபத்தியின் புகை, சிகரெட்டை விட ரொம்ப டேஞ்சர் என தெரியவந்துள்ளது. தென் சீன தொழில்நுட்ப யூனிவர்சிட்டியின் ஆய்வில், ஊதுபத்தியில் மிக நுண்ணிய அல்ட்ராஃபைன் 99% இருப்பதாகவும், அதில் நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் பொருள்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே மக்களே, கொஞ்சம் உஷாரா இருங்க!