News August 8, 2024
BREAKING: பல்லடத்தில் வாலிபர் வெட்டி படுகொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்குட்பட்ட கரையான்புதூர் பகுதியில் இன்று காலை மர்ம நபர்களால் துரத்திச் செல்லப்பட்ட வாலிபர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற டிஎஸ்பி விஜிகுமார் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி உயிரிழந்தவர் யார்? கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 7, 2025
திருப்பூர்: 10-ம் வகுப்பு போதும்.. ரயில்வேயில் வேலை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான (Sports Quota) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 50 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர், முதுநிலை எழுத்தர் (கிளார்க்), இளநிலை எழுத்தராக பணியமர்த்தப்படுவர். இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 7, 2025
திருப்பூர்: இந்த App மூலம் புகாரளிக்கலாம்!

திருப்பூர் மக்களே, உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <
News August 7, 2025
திருப்பூரில் தேடப்பட்டு வந்த நபர் என்கவுண்டரில் பலி

குடிமங்கலத்தில் ssi சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் மணிகண்டனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்ற போது, சரவணக்குமார் என்ற உதவி ஆய்வாளரை வெட்டி விட்டு தப்ப முயன்றபோது, போலீசார் சுட்டதில் சம்பவயிடத்திலேயே மணிகண்டன் பலியானார். உடுமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளனர்.