News August 8, 2024

அணைப்பகுதிகளில் வறண்ட வானிலை நீடிப்பு

image

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று(ஆக.08) காலை 117.75 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70.11 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 125.39 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 451 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு எதுவும் பதிவாகவில்லை. வறண்ட வானிலை நீடிக்கிறது.

Similar News

News November 14, 2025

நெல்லை: தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலி

image

தேவர்குளத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நேற்று தேவர் குளத்தில் இருந்து ராமையன்பட்டிக்கு பைக்கில் மானூர் அருகே அழகிய பாண்டியபுரம் சென்றார். அப்போது நெல்லையில் இருந்து ஸ்ரீவல்லிபுத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து பைக் மீது மோதியது. இதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மானூர் போலீசார் அவரது உடலை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 14, 2025

நெல்லை: பெண்ணிடம் கத்தியை காட்டி செயின் பறிப்பு

image

மானூர் கீழபிள்ளையார் குளத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் கடந்த 8-ம் தேதி தாமிரபரணி ஆற்றில் வைத்து கத்தியை காட்டி மிரட்டி 4 பவுன் செயினை பறித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து முத்துலட்சுமி ஜங்ஷன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்து நெல்லை சந்திப்பு பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து மற்றும் ஹரி கிருஷ்ணா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

News November 14, 2025

நெல்லையில் தேசிய புத்தக கண்காட்சி

image

நெல்லை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நடத்தும் 40வது தேசிய புத்தக கண்காட்சி நாளை (நவ.14) மாலை‌ 5 மணிக்கு எஸ்.என் ஹை ரோடு நயினார் காம்ப்ளக்ஸ் அருகில் வைத்து நடைபெற உள்ளது. நிவேதிதா கல்விக் குழுமம் முத்துக்குமாரசாமி புத்தக கண்காட்சியை திறந்து வைக்கிறார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார். புத்தகக் கண்காட்சி நவ.14 முதல் 30 வரை நடைபெறுகிறது.

error: Content is protected !!