News August 8, 2024
திருச்சி எம்எல்ஏவின் நெகிழ்ச்சி செயல்

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தனது மாதச் சம்பளம் முழுவதையும் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்திற்கு வழங்கினார். மேலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் படிப்புக்கு தேவையான முழு கட்டண தொகையையும் நேற்று வழங்கினார். இவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து உங்களின் கருத்துக்களை பதிவிடவும்
Similar News
News January 13, 2026
திருச்சி: நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..

திருச்சி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<
News January 13, 2026
திருச்சி: சொத்து தகராறு, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு!

திருச்சி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News January 13, 2026
திருச்சி: 17-ம் தேதி முக்கிய ரயில் ரத்து!

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து காலை 7:20 மணிக்கு புறப்படும் திருச்சிராப்பள்ளி – ஈரோடு ரயிலானது வரும் 17ஆம் தேதி, கரூர் – ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து, கரூர் ஜங்ஷன் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


