News August 8, 2024

திருச்சியில் அடுத்த மாதம் விஜய் கட்சி மாநாடு?

image

திருச்சி பொன்மலையில் விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு அடுத்த மாதம் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவரது கட்சியின் முதல் மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் வேலை தீவிரமாக நடந்து வந்தது. தற்போது அந்த மாநாட்டுக்கு திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தை தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தேர்வு செய்து விட்டதாகவும், விரைவில் மாநாடு பணி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News November 1, 2025

BREAKING: செங்கோட்டையன் வெளியிடும் ஆடியோ

image

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்னும் சற்று நேரத்தில் முக்கிய ஆடியோ ஒன்றை வெளியிட உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 30 நிமிடங்களாக தனது ஆதரவாளர்களுடன் ஈரோடு புறநகர் அதிமுக அலுவலகத்தில் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சரியாக 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளார்.

News November 1, 2025

ருக்மணி வசந்த் இவருக்கு ஜோடியா?

image

பொதுவாக நடிகர் – நடிகைகள் ஜோடி போடும்போது, நடிகர்களுக்கு தான் வயது அதிகமாக இருக்கும். ஆனால் தன்னை விட குறைந்த வயது நடிகருடன் ஜோடி சேர உள்ளார் ‘நேஷனல் கிரஷ்’ ருக்மணி வசந்த். லிங்குசாமி இயக்கத்தில், இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ருக்மணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹர்ஷவர்தனை விட 3 வயது மூத்தவர் ருக்மணி வசந்த்.

News November 1, 2025

அயோடின் உப்பை ஒதுக்குபவரா நீங்க.. உஷாரா இருங்க!

image

அயோடின் உப்பை விட பிங்க் சால்ட் தான் ஹெல்தியானது என அயோடின் உப்பை பலரும் குறைத்து வருகின்றனர். ஆனால், அயோடின் குறைவால், உடலில் தைராய்டு பிரச்னை ஏற்படும் ஆபத்து உள்ளது. 1990-களில் தைராய்டு பிரச்னை இந்தியாவில் அதிகரித்த நிலையில், அரசு அயோடின் உப்பை ஊக்குவித்து அதை சமாளித்தது. எனவே, உணவில் கொஞ்சம் அயோடின் உப்பை சேர்ப்பதற்கு மறக்காதீர்கள். இத்தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!