News August 8, 2024
ரூ.4 கோடி 37 லட்சம் மதிப்பீட்டில் திறப்பு

தஞ்சை மாவட்டத்தில் ரூ 4 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் ஆரியப்படை வீடு, ஊராட்சி அங்கன்வாடி மற்றும் புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டடங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி., அன்பழகன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். மேலும் தஞ்சையில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
Similar News
News September 19, 2025
தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை பகுதிகள் இதுதான்!

நமது தஞ்சையில் நாளை 20.09.2025 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை தஞ்சையில் இயங்கி வரும் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடை ஏற்படும் பகுதிகள்!
1.தஞ்சாவூர்:
2.சேதுபவாசத்ரம்
3.ஒரத்தநாடு
4.பட்டுக்கோட்டை urban
5.கும்பகோணம்
6.ராஜன்தோட்டம்
7.திருமலை சமுத்திரம்
8.திருக்காட்டுபள்ளி , ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை!
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 19, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (செப்.18) இரவு 10 மணி முதல் இன்று(செப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
தஞ்சையில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு வெடிபொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.