News August 8, 2024
சேலத்தில் மின்தடை அறிவிப்பு

சிங்கிபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை (ஆக.9) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும். அவை: வாழப்பாடி, மேற்கு ராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், மத்தூர், சிங்கிபுரம், பெரிய கிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன்பட்டி.
Similar News
News July 5, 2025
‘குற்றங்களுக்கு போதைப்பொருள் உபயோகமே காரணம்’

“சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப்பொருள் உபயோகம் காரணமாக உள்ளது. வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கித் தருவதுடன் கொடுமையான குற்றங்கள் மீண்டும் நடக்காமல் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்” என சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோதிமணி பேசியுள்ளார்.
News July 5, 2025
எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு z + பாதுகாப்பை வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இபிஎஸ்க்கு ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போழுது z + பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் இபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
News July 5, 2025
சேலம் கோ ஆப் டெக்சில் பழைய பட்டுக்கு புதிய பட்டு விற்பனை!

சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் பழசுக்கு புதிய பட்டு சேலை விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பழைய வெள்ளி ஜரிகை பட்டு சேலைகளை மதிப்பீடு செய்து அதற்கு பதில் புதிய பட்டு சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், வருகிற ஜூலை 15ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.