News August 8, 2024

இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை

image

தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், மேற்கு திசை காற்றின் வேகமும் மாறுபடுவதாக கூறியுள்ளது. இதனால் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Similar News

News March 23, 2026

7 வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ₹30,800 குறைந்தது

image

தங்கம் வாங்க நினைத்தோருக்கு இம்மாதம் ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியிலும் தங்கம் விலை மளமளவென குறைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் காலை நேர வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 1 அவுன்ஸ் $289 குறைந்து $4,195 ஆக உள்ளது. கடந்த ஜன.29-ம் தேதி 1 சவரன் ₹1,34,400-க்கு விற்பனையான நிலையில், தற்போது ₹30,800 சரிந்து ₹1,03,600 ஆக உள்ளது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளதாம்.

News March 23, 2026

AK 47 துப்பாக்கிகளுக்கு லோகி கனெக்‌ஷன்.. போலீஸ் ஷாக்!

image

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சென்னை அசோக் நகரில் வாகன சோதனையில் 10-க்கும் மேற்பட்ட ‘AK 47’ துப்பாக்கிகளுடன் வேன் ஒன்று சிக்கியது. அதிர்ந்து போன போலீசார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில், இவை டம்மி துப்பாக்கிகள் என்பதையும், லோகேஷ் கனகராஜ் நடித்துவரும் ‘DC’ பட ஷூட்டிங்கிற்காக கொண்டு வரப்பட்டவை என்பதையும் போலீஸ் உறுதி செய்தனர். இதையடுத்து லைசன்ஸை சரிபார்த்தபின் அந்த வேனை விடுவித்தனர்.

News March 23, 2026

பொன்முடிக்கு Bye Bye சொன்னதா திமுக தலைமை?

image

சர்ச்சை கருத்துகள் பேசி சிக்கியதால் வரும் தேர்தலில் பொன்முடிக்கு சீட் கிடைப்பது கடினமே என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், இதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது நடக்கும் வேட்பாளர் நேர்காணலில் பொன்முடி பங்கேற்கவில்லை என ஒரு தகவல் கசிந்துள்ளது. இவருக்கு பதிலாக இவரது மகன் கௌதம சிகாமணிக்கு திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது

error: Content is protected !!