News August 7, 2024

தர்மபுரியில் நெசவாளர்களுக்கான கையேடு வெளியீடு

image

10ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் லலிகம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் கைத்தறி துறையால் நெசவாளர்களுக்கான செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் தொடர்பான கையேடுகளை மாவட்ட ஆட்சியார் சாந்தி இன்று வெளியிட்டார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், கூட்டுறவு நெசவாளர் சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News

News December 26, 2025

தருமபுரி: 2,845 பேருக்கு நோட்டீஸ்!

image

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறுகிறது. இதில் வரைவுப் பட்டியலின்படி மொத்தம் 12,03,917 வாக்காளர்கள் உள்ளனர். 81,515 பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், பழைய வாக்காளர் விவரங்களைச் சரியாகக் குறிப்பிடாத 2,845 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. இவர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், இறுதிப் பட்டியலில் பெயர் இடம் பெறாது.

News December 26, 2025

தருமபுரி: 8-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்!

image

பொம்மிடி அருகே, 8-ஆம் வகுப்பு மாணவி கடைக்கு சென்றுள்ளார், அப்போது கடையில் இருந்த நந்தகுமார் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் பள்ளி வந்த மாணவிக்கு போலீசார் போக்கஸோ குறித்து விழிப்புணர்வு நினைவிற்கு வந்தது. வீட்டிற்கு வந்த மாணவி 1098 எண்ணிற்கு அழைத்து புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் போலீசார் விசாரணை செய்து நந்தகுமாரை போக்ஸோவில் கைது செய்தனர்.

News December 26, 2025

தருமபுரி: கார்- பைக் மோதி பயங்கர விபத்து!

image

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே ஜங்காலஅள்ளியை சேர்ந்த சேரன் (35) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (32) மோட்டார் சைக்கில் சென்ற போது, எதிரே வந்த கார் மோதை ஏற்பட்ட விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கார் ஓட்டி வந்த ஜான்சன் (32) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!