News August 7, 2024

வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி?

image

கடந்த மாதம் 29ஆம் தேதி கேரளாவின் வயநாட்டில், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்ற நிலையில் பிரதமர் மோடி வயநாடு செல்லாதது விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், வரும் ஆக.10 அல்லது 11 ஆம் தேதி பிரதமர் மோடி வயநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News December 26, 2025

கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்த பார்வையாளர் கோவிந்தராவ் தலைமையில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து அரசியல் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

News December 26, 2025

BREAKING: ரூபாய் மதிப்பு சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ₹15 பைசா குறைந்து, ₹89.86 என வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்துள்ளது. இந்த சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது.

News December 26, 2025

விஜய்க்கு விஜய் வசந்த் பதிலடி!

image

யார் தீய சக்தி, தூய சக்தி என்பது 2026 தேர்தலில் தெரியும் என காங்கிரஸ் MP விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் வசந்த், களத்திற்கு வரும் புதிய கட்சி ஆளுங்கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் பல நல்ல திட்டங்களை CM கொண்டு வந்துள்ளார். எனவே எங்கள் கூட்டணியே வெல்லும் என்றார். முன்னதாக திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி என விஜய் ஈரோட்டில் பேசியிருந்தார்.

error: Content is protected !!