News August 7, 2024
முன்பதிவு இல்லா பயண சீட்டு விற்பனை அதிகரிப்பு

மொபைல் போன் முன்பதிவு இல்லா பயண சீட்டுகள் விற்பனை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாதத்திற்கு சுமார் 26,978 பயணிகள் மொபைல் போன் பயணிச்சீட்டுகள் மூலம் பயணம் செய்த நிலையில் அது கடந்த ஜூலையில் 68,631 ஆக உயர்ந்துள்ளது. இச்சாதனையை எட்ட காரணமாக இருந்த ஊழியர்களை மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் கணேஷ் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.
Similar News
News March 14, 2026
மதுரை: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY..!

மதுரை மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<
News March 14, 2026
மதுரை: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..
News March 14, 2026
மதுரையில் OPS ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தனர்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை, மேலூர் பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் (மார்.12) எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


