News August 7, 2024
பெரம்பலூர் ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்லூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று 07.08.2024 நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News August 19, 2025
பெரம்பலூர்: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம் ஆக.22ம் தேதி பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. எனவே வேலை அளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்கள் தவறாது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
News August 18, 2025
பெரம்பலூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மதுர காளியம்மன் திருக்கோயில் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News August 18, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 19,436 மனுக்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வாயிலாக 19,436 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். முகாமில் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.