News August 7, 2024

நாளை வேலைவாய்ப்பு முகாம் !

image

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. THRIVENI CAR COMPANY என்ற தனியார் நிறுவனம் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறுகிறது. இந்த நிறுவனம் ரூ 10,000 முதல் ரூ 25,000 வரை ஊதியம் வழங்குகிறது. இதற்கு 10ம் வகுப்பு முதல் எந்த பட்டப்படிப்பு வரையிலும் வேலை தேடுபவர்கள் பங்கேற்கலாம்.

Similar News

News July 5, 2025

எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு

image

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு z + பாதுகாப்பை வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இபிஎஸ்க்கு ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போழுது z + பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் இபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

News July 5, 2025

சேலம் கோ ஆப் டெக்சில் பழைய பட்டுக்கு புதிய பட்டு விற்பனை!

image

சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் பழசுக்கு புதிய பட்டு சேலை விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பழைய வெள்ளி ஜரிகை பட்டு சேலைகளை மதிப்பீடு செய்து அதற்கு பதில் புதிய பட்டு சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், வருகிற ஜூலை 15ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News July 5, 2025

சேலம் வங்கியில் வேலை? உடனே விண்ணப்பிங்க!

image

சேலம்: பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!