News August 7, 2024

நீரில் மூழ்கி மூன்று குழந்தைகள் உயிரிழப்பு

image

கோனேரிகுப்பம் கிராமத்தில் இன்று நாவல் பழம் பறிக்க அப்பகுதியிலுள்ள ஓடையை கடந்து செல்ல முயன்ற 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரின் மகன் சஞ்சய் மற்றும் மாரிமுத்து என்பவரின் மகள்கள்
பிரியதர்ஷினி, சுபஸ்ரீ ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒலக்கூர் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 19, 2026

விழுப்புரம்: பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆலோசனை கூட்டம்!

image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன.19) நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் அ.ல.ஆகாஷ் கலந்து கொண்டனர்.

News January 19, 2026

JUST IN: விழுப்புரம் அருகே மகளை கொன்ற தந்தை!

image

விழுப்புரம் அருகே கண்டமங்கலம் சேர்ந்த முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் கோதண்டராமன் இவரது மகள் ஸ்வேதா நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் தொற்றால் அவதிப்பட்ட ஸ்வேதாவை கோதண்டராமன் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு பின்னர் தானும் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இது குறித்த புகாரில் கண்டமங்கலம் போலீசார் முன்னாள் உதவி காவல் ஆய்வாளர் கோதண்டராமன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

News January 19, 2026

விழுப்புரம்: பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். இதை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!