News August 7, 2024
10 மணிக்குள் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்

இரவு 10 -11 மணிக்குள் தூங்குவதால் இதயம் மற்றும் அது சார்ந்த நோய் அபாயங்கள் குறைவதாக ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல் நடத்திய ஆய்வு கூறுகிறது. தினமும் 8-9 மணி நேரம் உறக்கம் பெற வாய்ப்புள்ளதால், உடல் முழுமையாக ஓய்வெடுக்க வழிவகுக்கிறது. ஹார்மோன்களில் சமநிலை ஏற்படுவதால், வேலையில் செயல்திறன் அதிகரிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் நல்ல வலுப்பெறுவதால், உடல் முழுமையான ஆரோக்யம் பெறுகிறது.
Similar News
News January 3, 2026
தேர்தல் அறிக்கைக்கு ‘ஆப்’ ரிலீஸ் செய்த திமுக!

திமுக தேர்தல் அறிக்கைக்கான ‘DMK Manifesto 2026’ செயலியை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இது, தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட கனிமொழி தலைமையிலான குழு, இந்த செயலியை கண்காணித்து, அறிக்கையை தயார் செய்யும்.
News January 3, 2026
‘ரஜினி 173’ படத்தின் கதை இதுதானா..!

ரஜினியின் 173-வது பட அப்டேட் இன்று வெளியான நிலையில், படத்தின் கதை இதுதான் என நெட்டிசன்கள் கணித்து வருகின்றனர். அதன்படி, ரஜினி ஒரு காலத்தில் நேர்மையான போலீஸாக இருந்தார். பின் தனது பேமிலிக்காக சாதாரண டெய்லராக (போஸ்டரில் உள்ள கத்தரி, நூலை அடிப்படையாக வைத்து) வாழ்க்கையை தொடர்கிறார். எனினும் தன்னை துரத்தும் எதிரிகளிடமிருந்து எப்படி குடும்பத்தை காக்கிறார் என்பதே கதையாக இருக்கும் என கணித்துள்ளனர்.
News January 3, 2026
உள்கட்சி சலசலப்பு.. தமிழகம் வருகிறாரா ராகுல் காந்தி?

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரவுள்ளனர். இந்நிலையில், ஜன., 4-வது வாரத்தில் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 100 நாள் வேலைத்திட்ட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் என கூறப்படுகிறது. மூத்த நிர்வாகிகள் உடனும் ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


