News August 7, 2024

கால அவகாசம் நீட்டிப்பு: திண்டுக்கல் கலெக்டர் தகவல்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் 1.8.2024 முதல் 31.1.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 31, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News October 31, 2025

திண்டுக்கல்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நாளை (31.10.2025) நடைபெறுகிறது. திண்டுக்கல் மாநகராட்சியில் மேட்டுப்பட்டி உயிர்த்த ஆண்டவர் மக்கள் மன்றத்தில், பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒட்டன்சத்திரம் வண்டிப்பாதை அரசு உயர்நிலைப் பள்ளியில், வேடசந்தூர் வரப்பட்டி இ.சித்தூர் சேவை மையக் கட்டிடத்தில், நத்தம் துரைகமலம் மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானம் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.

News October 30, 2025

திண்டுக்கல் காவல்துறையின் விழிப்புணர் புகைப்படம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினம்தோறும் சமூக வலைதளங்களில் விழிப்புணர் புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் (அக்டோபர் 30) இன்று, வேலை வாங்கி தருவதாக கூறி இணையத்தில் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்ற விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது.

error: Content is protected !!