News August 7, 2024

உயிர் காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணை

image

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், நீச்சல் மற்றும் மீட்புப்பணிகளில் பயிற்சி பெற்ற 39 உயிர் காக்கும் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில், முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி இந்த 39 உயிர் காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Similar News

News August 23, 2025

ECR சாலையில் மீனவர்கள் சாலை மறியல்

image

காலாப்பட்டில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றாத இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் புதுச்சேரி – சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

News August 23, 2025

புதுவை: ITI போதும் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

மூன்று மாநில நிலப்பகுதிகளால் சூழப்பட்ட புதுவை

image

புதுவை என அழைக்கப்படும் புதுச்சேரி, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாத புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் உள்ளிட்ட நான்கு பகுதிகளை உள்ளடக்கியது. இதில், புதுச்சேரியும், காரைக்காலும் தமிழ்நாடு மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. மாகே கேரளா மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. ஏனம் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.

error: Content is protected !!