News August 7, 2024
சேலத்தில் நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

சேலம், கொண்டலாம்பட்டியில் 10- வது தேசிய கைத்தறி தினம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்து நேரில் பார்வையிட்டனர்.
Similar News
News July 5, 2025
எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு z + பாதுகாப்பை வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இபிஎஸ்க்கு ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போழுது z + பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் இபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
News July 5, 2025
சேலம் கோ ஆப் டெக்சில் பழைய பட்டுக்கு புதிய பட்டு விற்பனை!

சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் பழசுக்கு புதிய பட்டு சேலை விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பழைய வெள்ளி ஜரிகை பட்டு சேலைகளை மதிப்பீடு செய்து அதற்கு பதில் புதிய பட்டு சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், வருகிற ஜூலை 15ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
News July 5, 2025
சேலம் வங்கியில் வேலை? உடனே விண்ணப்பிங்க!

சேலம்: பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க<