News August 7, 2024
கனமழை பெய்வதால் சாலைகளில் வெள்ளம்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில், ஈரோடு, சேலம், தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
Similar News
News August 21, 2025
தவெக மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

*பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு கண்டனம். *நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். *மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம். *ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். *சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதற்கு காரணமான திமுக அரசுக்கு கண்டனம். *TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் மூலம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
News August 21, 2025
எல்லா நேரத்துலயும் அது முடியாது.. மத்திய அரசு வாதம்

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு விதித்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எல்லா விவகாரங்களிலும் கவர்னர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு என மத்திய அரசு வாதிட்டது. இதனையடுத்து, மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு காலக்கெடு இல்லையென்றால், வேறு ஏதாவது ஒரு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என SC தெரிவித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
News August 21, 2025
இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வராதீங்க

தமிழகத்தின் பல பகுதியில் காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில், இரவில் 24 மாவட்டங்களில் மழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், சேலம், க.குறிச்சி, தி.மலை, திருவள்ளூர், காஞ்சி, வேலூர், தருமபுரி, நாமக்கல், பெரம்பலூர், நீலகிரி, ஈரோடு, திருச்சி, கரூர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாம். அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும்.