News August 7, 2024
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.7) மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 27, 2025
மதுரையில் 70 பேருக்கு மறுவாழ்வு

மதுரை அரசு மருத்துவமனையில், கடந்த 11மாதங்களில் மூளைச்சாவு அடைந்த (மோகன் குமார், வினோத், பெருமாள், கோச்சடை முத்தையா, சபரீஷ், ஆனந்த போதிகுமரன், முனியாண்டி, ஹரிதேவி, ஈஸ்வரன், முருகேஸ்வரி, தேவமனோகரி மற்றும் சேகர்) ஆகிய 12 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறுநீரகம் 22 பேர், கல்லீரல் 10 பேர், இதயம் & நுரையீரல் தலா 2 பேர் என மொத்தம் 70க்கும் மேற்பட்டோர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
News December 26, 2025
மதுரை: நிலம் வாங்கும் போது இத CHECK பண்ணுங்க.!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. மதுரை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய இங்கே <
News December 26, 2025
மதுரை: கரண்ட் பில் தொல்லை; இனி இல்லை..

மதுரை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <


