News August 7, 2024
ஸ்டாலின் விரைவில் ஜெய் ஸ்ரீராம் என்பார்: அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலின் விரைவில் ஜெய் ஸ்ரீராம் என்று கூறுவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் கடவுள் மறுப்பு கொள்கை வேலைக்கு ஆகாது என்று திமுகவுக்கு தெரிந்து விட்டதாகக் கூறிய அவர், எதை சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ அதையெல்லாம் மாற்ற வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு தற்போது வந்துவிட்டது என்றார். முன்னதாக, அமைச்சர் ரகுபதி தமிழகத்தில் ராமர் ஆட்சி நடப்பதாக கூறியிருந்தார்.
Similar News
News January 16, 2026
சேலம்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News January 16, 2026
BREAKING: விஜய் முக்கிய முடிவு

அரசியலுக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் விஜய் இதுவரை பத்திரிகையாளர்களை சந்திக்காதது சர்ச்சையாக உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக தனியார் நிகழ்ச்சியில் பேசிய தவெகவின் CTR நிர்மல் குமார், தேவை ஏற்படும் போது நிச்சயமாக விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவெடுத்துள்ளார் என்றும், அவருக்கு பயம் கிடையாது எனவும் கூறியுள்ளார். ஒருவேளை விஜய் பத்திரிகையாளர்களை சந்தித்தால் முதல் கேள்வியாக என்ன கேட்கலாம்?
News January 16, 2026
கிஃப்டாக வரும் புத்தகங்களை ஸ்டாலின் என்ன செய்வார்?

CM மற்றும் DCM ஆகியோருக்கு கிஃப்டாக வரும் அனைத்து புத்தகங்களும் TN-ல் உள்ள நூலகங்களுக்கு அனுப்பப்படுவதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க விரும்பும் சில புத்தகங்களை மட்டும் தங்களிடம் வைத்துக்கொள்கிறார்கள் என கூறியவர், ஏதேனும் நூலகத்திற்கு புத்தகங்கள் தேவைப்பட்டால், CM, DCM ஆகியோருக்கு கடிதம் எழுதலாம். அவர்கள் மகிழ்ச்சியுடன் அதனை அனுப்பி வைப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


