News August 7, 2024
தகுதி நீக்கம் வருத்தமளிக்கிறது: பி.டி.உஷா

வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் மிகவும் வருத்தமளிப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் PT உஷா வேதனை தெரிவித்துள்ளார். தகுதி நீக்கத்திற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்து கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறிய அவர், மத்திய அரசும், இந்திய ஒலிம்பிக் கமிட்டியும் வினேஷ்க்கு அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது என்றார். மேலும், அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளுடன், முழு ஆதரவையும் வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.
Similar News
News December 8, 2025
பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை மூலம் பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய மாணவ-மாணவியர்களுக்கான, இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் 09.12.2025 முதல் 12.12.2025 வரை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…
News December 8, 2025
வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2014-ல் ₹62-ஆக இருந்த ரூபாய் மதிப்பு தற்போது ₹90-க்கும் கீழ் சென்றுள்ளது. மேலும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், இறக்குமதி பொருள்களின் விலையில் எதிரொலிக்கும். குறிப்பாக, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை, சமையல் எண்ணெய் விலை, மின்னணு பொருள்கள், செல்போன், லேப்டாப், மருந்துகள், கார்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
News December 8, 2025
புடினை தொடர்ந்து இந்தியா வரும் ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில்தான் புடின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விசிட்டில் PM மோடி அவரிடம் உக்ரைன் உடனான போர் குறித்து பேசியதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து ஜெலன்ஸ்கியும் இந்தியா வரவுள்ளதால், உக்ரைன் தரப்பு கோரிக்கைகளை PM கேட்டறியலாம். இதன்பிறகு, அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.


