News August 7, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தர்மபுரி, கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News January 2, 2026
கசாப்புக்கடைக்காரன் ஜீவகாருண்யம் பேசுவதா? BJP

போதை பொருள்களை ஒழிப்பதில் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என CM ஸ்டாலின் பேசியதை சுட்டிக்காட்டி H.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். மதுபான ஆலைகளை திமுக தலைவர்களே நடத்திக் கொண்டு, போதைப்பொருள் ஒழிப்பு குறித்து CM பேசுவது, கசாப்புக்கடைக்காரன் ஜீவகாருண்யம் பற்றி பேசுவது போல இருப்பதாக அவர் சாடியுள்ளார். போதைப்பொருள் வழக்கில் சிக்கிய திமுக நிர்வாகிகளின் பட்டியலையும் SM-ல் பதிவிட்டுள்ளார்.
News January 2, 2026
2026-ல் கணவன் – மனைவி சிக்கலுக்கு ஆளாகும் ராசிகள்

2026-ல் சில ராசிக்காரர்கள் திருமண உறவுகளில் சவால்களை சந்திக்க நேரிடலாம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக, மேஷம், கடகம், சிம்மம், துலாம், மகரம், கும்பம் ராசியை கொண்ட கணவன் – மனைவி உறவுகளில் புரிதலின்மை, ஈகோ அதிகம் வரக்கூடுமாம். மேலும், ரிஷபம், கன்னி, விருச்சிகம் ராசிகளுக்கு கவனக்குறைவு, பழைய பிரச்னைகளை மீண்டும் பேசி சிக்கல்கள் எழலாம். அவற்றை திறந்த மனதுடன் பேசி சரிசெய்வதே சிறந்த பரிகாரம்.
News January 2, 2026
மை பேனாவில் ஒரு வார்த்தை எழுதுவோமா..!

‘பேனா’ என்பது எல்லையில்லா அற்புதங்களை நிகழ்த்தும் என்று நமக்கு தெரியும். இந்த பேனாவை பிடித்து எழுதுவதற்காக நாம் பள்ளியில் சேர்ந்தாலும் குறைந்தது 5 ஆண்டுகளாவது (6th std) காத்திருந்திருப்போம். இன்றோ மை ஊற்றிய பேனாவை நாம் மறந்திருக்கலாம். இன்றைய உங்கள் பணிக்கு அது தேவைப்படவில்லை என்றாலும், ஒரு பேனாவை வாங்கி தினமும் ஒரு பக்கமாவது எழுதுங்களேன். அப்படி எழுதினால் முதலில் எந்த வார்த்தையை எழுதுவீர்கள்?


