News August 7, 2024
வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் சதி?

வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் சதி இருப்பதாக குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சந்தேகம் எழுப்பியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில், மகளிருக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜயேந்தர், 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததற்காக எல்லாம் தகுதிநீக்கம் செய்ய மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
இசையில் மிதக்க வைத்த இளையராஜா பாடல்கள்

இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே ரசிக்கும்படி இருந்தாலும், சில பாடல்கள் நம்மை வேறு உலகிற்கு கூட்டிச் செல்லும். கண்களை மூடி கேட்கும்போது, நம்மை இசையில் மிதக்க விட்ட சில பாடல்களை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இவை அனைத்தும் காலத்தால் அழியாதவை. உங்களுக்கு பிடித்த இளையராஜா பாடல் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 9, 2025
தவெக வெறும் அட்டை: மறைமுகமாக சாடிய உதயநிதி

ஊர்ல தாஜ்மகால், ஈபிள் டவர் செட் போட்டு EXHIBITION நடத்தினால் கூட்டம் கூடத்தான் செய்யும், ஆனால் அதெல்லாம் வெறும் அட்டை என விஜய்யை மறைமுகமாக உதயநிதி விமர்சித்துள்ளார். அப்படி போடப்பட்ட செட்டுகளுக்கு எந்த அஸ்திவாரமோ, கொள்கையோ கிடையாது என தெரிவித்த அவர், தட்டினால் அட்டை விழுந்துவிடும் எனவும் கூறியுள்ளார். ஆனால் திமுக என்பது தியாகத்தாலும் போராட்டத்தாலும் உருவான மாபெரும் கட்சி என கூறியுள்ளார்.
News November 9, 2025
Depression-ஆல் தேம்பி அழுதேன்: பிரபல நடிகர்

கொரோனா ஊரடங்கின் போது மும்பையில் தனியாக இருந்ததால் மன அழுத்தத்துக்கு ஆளானதாக நடிகர் விஜய் வர்மா கூறியுள்ளார். தனிமையை தாங்கமுடியாததால் தேம்பி தேம்பி அழுததாகவும், படுக்கையை விட்டே நகராமல் இருந்ததாகவும் மனம் திறந்துள்ளார். இதனை கவனித்த அமீர் கானின் மகள் நடிகை ஐரா கான் வீடியோ காலில் தனக்கு உறுதுணையாக இருந்தார் என்றும், அதன்பிறகு மனநல டாக்டரிடம் இதுகுறித்து ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்துளார்.


