News August 7, 2024
மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஐகோர்ட்

பெங்களூரு குண்டுவெடிப்புக்கு தமிழர்கள்தான் காரணம் என்று ஆதாரமின்றி பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே, செய்தியாளர் சந்திப்பை கூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்புக்கு பதில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News October 25, 2025
சுஷாந்த் மரணத்தில் ரியாவுக்கு தொடர்பில்லை: CBI

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம், நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அவரை தற்கொலைக்கு தூண்டியதாக Ex காதலி ரியா சக்ரவர்த்தி மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து வந்த CBI, ரியா மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆனால், சரியாக விசாரிக்காத CBI-யின் அறிக்கையை ஏற்க முடியாது என்று சுஷாந்த் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
News October 25, 2025
நகைக் கடன்.. HAPPY NEWS

தங்க நகைக் கடனை அதிகரிக்க ஸ்மால் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு RBI பச்சைக்கொடி காட்டியுள்ளது. தனிநபர், வீடு, வாகனம் போன்ற வங்கிக் கடன்களின் வளர்ச்சி சமநிலையில் உள்ளது. இதனால், குறைந்த வட்டியில் நகைக் கடன்களை வழங்க வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தங்க நகைக் கடன் பாதுகாப்பானது என்பதால், கிராமப் புறங்களில் இந்த வசதிகள் இல்லாத கிளைகளிலும் இனி நகைக் கடன்களை வழங்க ஸ்மால் பைனான்ஸ்கள் தீவிரம் காட்டுகின்றன.
News October 25, 2025
திருமாவால் இதற்கு பதில் கூற முடியுமா? நயினார்

அதிமுக – பாஜக கூட்டணியை விரும்பத்தகாதது என திருமாவளவன் விமர்சித்திருந்த நிலையில், NDA கூட்டணி என்பது இயற்கையானது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சமூக நீதி பேசும் திமுகவுடன் கூட்டணியில் உள்ள திருமா, வேங்கைவயல் பிரச்னை என்ன ஆனது என்பதற்கு பதில் கூற முடியுமா என கேள்வி எழுப்பினார். பதில் கூற முடியவில்லை என்றால், திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வர வேண்டியது தானே என்றும் சாடியுள்ளார்.


